கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு..துள்ளி குதிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்..
கோவையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பேரூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பேரூரில் சுமார் 1800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கரிகாலச் சோழன் எனும் சோழ மன்னரால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
மேலும் இந்த கோயிலின் கட்டமைப்பு பல்வேறு கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதால் மிகுந்த சிறப்பாசங்களை கொண்டுள்ளது. தற்போது வரை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பட்டீஸ்வரர் கோவிலில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனால் மாநிலம் முழுவதிலிருந்தும் பல்வேறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருதி நாளை பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழில் வெளிவந்த அறிவிப்பு..
தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழக்கம் முன்னிட்டு கோவை பேரூர் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அதற்கு மறுநாள் தைப்பூசம் என்பதால் தொடர்ந்து இரு நாட்கள் இரு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் குஷியில் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழா பணிகள் நாளை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக வழிபாடு செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் பாடிய எட் சீரன்.. கடுப்பான போலீசார்.. மைக்கை வீசி எறிந்து கலைந்த கச்சேரி...