×
 

பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் அப்பாவா..? விக்னேஷ் சிவனால் சூடுப்பிடித்த இணையதளம்!!

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சீமான் நடித்திருப்பதாக இணைத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் மற்றொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தில் பிரதீப் ஹீரோவாகவும் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். முன்னதாக விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு திரைப்படம் பெரிதாக எதிர்ப்பார்த்தை வரவேற்பை பெறாததால் அடுத்த வாய்ப்புகள் எதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த அவருக்கு போஸ்டர் டிசைன் மூலம் நடிகர் தனுஷுக்கு அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு நானும் ரௌடிதான் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தனுஷ் தயாரித்தார்.

இதையும் படிங்க: கண்ட கனவு நினைவானது... தற்பொழுது ஓடிடியில் டிராகன்..! குஷியில் இளசுகள்..!

அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆனந்த்ராஜ் என பலர் நடித்திருந்தனர். இது மெகா ப்ளாக் பஸ்டர் படமானதால் அடுத்த அடுத்த பங்களை இயக்கினார் விக்னேஷ் சிவன். அந்த வகையில் அவர் இயக்கி வெளியான தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் படுதோல்வியையே சந்தித்தன. இதனிடயே நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதுமட்டுமின்றி உயிர், உலக் என்கிற பெயரில் இரண்டு மகன்களும் இவர்களுக்கு உள்ளனர். 

அதன்பிற்கு லைகா நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜீத்தை வைத்து படம் எடுக்கப்போவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தை தொடங்கினார். இதில் கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்லிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, மகனும், தந்தையும் எதிர்காலத்தில் ஒரே பெண்ணை காதலிப்பது போன்று கதையை விக்கி அமைத்திருப்பதாகவும் இதில் மகனாக பிரதீப் ரங்கநாதனும் தந்தையாக சீமானும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. 
 

இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை வைத்த அஷ்வின் மாரிமுத்து... அடுத்து அவருடன் படமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share