×
 

உச்சநீதிமன்றம் வரை சென்ற பஞ்சாயத்து...சூடு பிடிக்கும் சீமான் பாலியல் வழக்கு!!

நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு புகாரில் வசமாக சிக்கியுள்ள சீமானின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு புகாரில் வசமாக சிக்கியுள்ள சீமானின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அதேநேரம் சீமான் மீது அதிருப்தியான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் நாதகவில் இருந்து விலகினர். 

இந்த சூழலில் சீமான் மீது அடிக்கடி நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. 

அதன்படி நேற்று விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் ஏற்கெனவே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று கூறப்பட்டது. இதனால் சீமானின் நீலாங்கரை வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது வீட்டின் சுவற்றில் சம்மனை ஒட்டினர். விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது செய்யக் கூடும் என எச்சரித்தனர். 

இதையும் படிங்க: துப்புக்கெட்ட நாயே சீமான்... உன்னுடன் படுத்தது எனக்குத்தான் கேவலம்..! வெளுத்து வாங்கிய விஜயலெட்சுமி..!

சம்மன் ஒட்டிய சில நிமிடங்களிலேயே அது கிழிக்கப்பட்டது. இதனால், சீமான் வீட்டில் திரண்ட நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. சீமான் வீட்டு காவலர் துப்பாக்கி வைத்திருந்ததால் அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இது குறித்து கண்டனம் தெரிவித்த சீமான், போலீசார் அராஜகமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான சீமானிடம் 3 மணி நேரம் விசாரணை நீடித்தது. 

சீமானின் வழக்கு தமிழகத்தில் பரபரப்பாக பேசட்டும் வரும்  சூழலில் தன் மீது நடிகை அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை கேட்டும் சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. பாலியல் புகார், அடிதடி, சர்ச்சை பேச்சு என கடந்த சில நாட்களாக சீமான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான நபராக காணப்படுகிறார். 

தன் மீதான வழக்கை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் சீமான் தரப்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அரசியலுக்காக தன் மீது இப்படி ஒரு நடவடிக்கையை காவல்துறை எடுப்பதாக சீமான் குற்றம்சாட்டி வருகிறார்.

இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share