×
 

மன்னிக்க முடியாத குற்றம்.. என்ன செய்யுது மத்திய அரசு? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

ஜம்மு காஷ்மீர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை மத்திய அரசை சரமாரியாக வசைப்பாடியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். இந்த தாக்குதலில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து அப்பாவி பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அப்பாவி மக்களைத் தாக்குவது கோழைத்தனம் மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம் என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் பிரார்த்தனைகள் உள்ளன, ஆனால் இந்த சுழற்சி எவ்வளவு காலம் தொடரும் என கேள்வி எழுப்பியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று மத்திய அரசு பெரும் வாக்குறுதிகளை அளித்திருந்த போதும், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பயங்கரவாதம் நீடிப்பது மட்டுமல்லாமல், அமைதியான சுற்றுலாப் பயணிகளைக் கூட குறிவைப்பது பரவியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: நான் முதல்வன் லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றும்..! முதலமைச்சர் பெருமிதம்..!

மத்திய அரசு குடிமக்களைப் பாதுகாக்க உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறது? உண்மையான நடவடிக்கை எங்கே? உத்தி எங்கே? மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாத வலையமைப்புகள் ஏன் தண்டனையின்றித் தாக்குகின்றன? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். மத்திய அரசு விழித்தெழ வேண்டுமே தவிர வெற்றுப் பேச்சுகளால் நம் மக்களின் உயிரைக் காக்க முடியாது என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கேவலமான அரசியலை இதோட நிறுத்திக்கோங்க..! எதிர்க்கட்சிகளை திட்டித்தீர்த்த அமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share