×
 

1000 ஆடுகளை அறுத்தால் பக்ரீத்.. ஒரே ஒரு ஆட்டை அறுத்தால் தேர்தல்… அண்ணாமலையை வம்பிழுக்கும் செந்தில் பாலாஜி..!

எத்தனைகள் ஆடுகள் வந்தாலும் சரி.. பள்ளப்பட்டிக்கு உள்ளேயும் வர முடியாது.. உள்ளே வந்தால் வெளியேவும் போக முடியாது.. 

''ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் பக்ரீத் காலம். ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் தேர்தல் கால, பள்ளபட்டி உள்ளே வந்துட்டு ஆடு வெளியே செல்ல முடியாது.ஆடு உள்ளே வரும், வெளியே போக முடியாது'' என பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக  அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். 

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் இஸ்லாமியர் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால், அது பக்ரித் காலம். ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்து கறி போட்டால், அது தேர்தல் காலம். ஒரு ஆடு அல்ல.. எத்தனைகள் ஆடுகள் வந்தாலும் சரி.. பள்ளப்பட்டிக்கு உள்ளேயும் வர முடியாது.. உள்ளே வந்தால் வெளியேவும் போக முடியாது.. 

இதையும் படிங்க: என் போன்ல அண்ணாமலையோட வீடியோ இருக்கு... சிங்கிள் வார்த்தையில் பாஜகவை சிதறவிட்ட செந்தில் பாலாஜி...! 

இதனை கடந்த தேர்தல்களில் நிரூபித்து காட்டியுள்ளீர்கள். வரக் கூடிய காலத்தில் அதனை தொடர வேண்டும். உங்களில் நானும் ஒருவன். தொகுதி பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகள் வரும். 10 கோரிக்கைகள் வந்தால், அதில் 2 பள்ளப்பட்டியைச் சார்ந்ததாக இருக்கும். அதனை ஒருபோதும் நிறைவேற்ற யோசித்ததில்லை'' என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையை மறைமுகமாக செந்தில் பாலாஜி கிண்டல் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

''அதர்மம் அம்பலமேறி, அடங்கா ஆட்டம் போடும் போது' சாட்சியாய் நிற்கும் பிரபஞ்சம் 'அறிவும் ஆற்றலும்' உள்ளவர்களை ஒவ்வொரு காலமும் தோற்றுவித்து அதர்மத்தை கட்டுபடுத்தி தர்மத்தை நிலைநாட்டும்'' என செந்தில் பாலாஜி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்ணாமலைக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு.. ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share