இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து..! முட்டுக்கொடுக்கும் பாகிஸ்தான்..!
இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
1972 ஆம் ஆண்டு இந்தியாவுடன் சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டது. 1971 ஆம் ஆண்டு நடந்த போரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே இந்த சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் உஷார் நிலையில் இருக்குமாறு முப்படைகளுக்கும் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்லா ஒப்பந்தம் மட்டுமல்லாது இந்தியாவுடன் அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும் இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்துவதாக பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் அதனை போர் நடவடிக்கை என்று விமர்சித்த பாகிஸ்தான் அரசு தற்போது இந்தியாவுடன் அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லையை மூடிய பாகிஸ்தான்... இந்திய விமானங்களுக்கு தடை! வெடிக்கும் சர்ச்சை...
இதையும் படிங்க: சீண்டிய பாக்.! ஏவுகணை சோதனையில் அரக்கனை இறக்கிய இந்தியா...!