இதுபோல 100 ‘சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என சட்டப்பேரவையில் கர்ஜித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
இதுபோல 100 ‘சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என சட்டப்பேரவையில் கர்ஜித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆம் நாள் அலுவலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர்.இந்த நிலையில், யார் அந்த சார் குறித்தான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அந்த பெயரை களங்கப்படுத்த வில்லை. எங்களை எல்லாம் ஆளாக்கியவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அங்கு நடைபெற்றிருப்பது மாபெரும் கொடூரம். இது குறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசுகிறார்கள் என்றார்.
இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்கு விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் அந்த சார்? என கேட்குறீங்க. உண்மையாகவே எதிர்க்கட்சி கிட்ட ஆதாரம் இருந்தா புலனாய்வு குழு கிட்ட சொல்லுங்க. அதை விட்டுவிட்டு மாணவிக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொல்லாதா ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி சம்பவம் தான் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் ,பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சாருங்க எல்லாம் இப்போ பேட்ஜ் அணிந்து வந்து இருக்காங்க ,இதுபோல 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் மனசாட்சி இன்றி பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுகிறவர்கள் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். அந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது என்றார்.
மீண்டும் ஒரு முறை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் இந்த திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்தை தொடங்கி கோடிக்கணக்கான மகளிருக்கு உரிமை தொகையை உறுதி செய்து கல்லூரிக்கு வரும் அரசு பள்ளி மாணவிகளை புதுமை பெண்களா வளர்த்து எடுக்கும் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்து, உயர்கல்வி கற்க வரக்கூடிய மாணவிகளை அச்சுறுத்தி அவர்களின் கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!