22 குழந்தைகளை காப்பாற்றிய இந்தியர்கள்.. சிங்கப்பூர் அரசு செய்த தரமான சம்பவம்!!
சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உட்பட 22 குழந்தைகளை மீட்ட இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அப்படி ஒரு கட்டிடத்தில் சிறுவர் சிறுமியர் படிக்கும் பள்ளி ஒன்று இருந்துள்ளது. அந்த பள்ளியில் தான் ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும் நடிகர் பவன் கல்யாணின் 8 வயது மகன் மார்க் சங்கர் பவனோவிச் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பயத்தில் அலறினர். இதை அடுத்து அருகில் இருந்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் தங்களது உயிரை பணயம் வைத்து தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர்.
குழந்தைகளை மீட்ட இந்தர்ஜித் சிங், சுப்ரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகிய 4 தொழிலாளர்களும் இந்தியவை சேர்ந்தவர்கள். அதில் சுப்ரமணியன் சரண்ராஜ் என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் 10 வயது மாணவி ஒருவர் உயிரிழந்தார். 15 குழந்தைகள் உட்பட 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகனான மார்க் ஷங்கரும் ஒருவர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கிய மகன் எப்படி இருக்கிறான்? மகனின் உடல்நிலை குறித்து உருக்கம்..!
தீ விபத்தில் சிக்கிய மார்க் ஷங்கருக்கு கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி புகை மூட்டத்தால் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே துணிச்சலுடன் குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்ட இந்தியவை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேரின் வீரத்தை சிங்கப்பூர் அரசு பாராட்டி கவுரவித்துள்ளது.
அவர்களின் விரைவான மற்றும் தன்னலமற்ற நடவடிக்கையை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு குழந்தைகளை மீட்ட இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகியோருக்கு நகர மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் மனிதவள அமைச்சகத்தின் உறுதி, பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (ACE) குழுவிலிருந்து "Friends of ACE" பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் பட்டாசு ஆலையில் தீ விபத்து..! 18 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்..!