நான் தற்கொலை முயற்சியே பண்ணல! தயவு செஞ்சு வதந்தி பரப்பாதீங்க- பாடகி கல்பனா
தான் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்றும் வதந்திகள் பரப்பப் படுவதால் அதனை விளக்க வீடியோ வெளியிடுவதாகவும் பாடகி கல்பனா தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததாலும், அவரது கணவன் வெளி ஊரில் வேலை செய்து வரும் நிலையில் செல்போனில் அழைத்த போது அழைப்பை எடுக்காத காரணத்தாலும் அக்கம் பக்கத்தினர் உதவியோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கதவை திறந்து பார்த்த போது மயக்க நிலையில் இருந்த பாடகி கல்பனாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இதையும் படிங்க: போப் ஆண்டவருக்கு புதிய சுவாச கோளாறு... முக கவசத்துடன் செயற்கை சுவாசம்..!
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயக்க நிலைக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது. கல்பனாவின் மகள் பேசுகையில், தங்கள் குடும்பத்தில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை எனவும் சரிவர தூங்க முடியாததால் தூக்க மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதாகவும், அதனால்தான் தனது அம்மாவிற்கு மயக்க நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என பாடகி கல்பனா வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அதில் தன் கணவருக்கும் தனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று விளக்கமளித்தார்.
தன் கணவர் தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதால் இந்த வீடியோ வெளியிடப்படுவதாகவும் அவர் தன்னை மிகவும் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாகவும், இறைவன் அருளால் நலமுடன் இருப்பதாகவும், கூறியுள்ளார். தனக்கு உதவிய காவல்துறைக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் ஊடகத்துறையினருக்கும் பாடகி கல்பனா நன்றி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் உடல்நிலை மீண்டும் மோசம்; பதவியை ராஜினாமா செய்வாரா?