×
 

‘மக்களின் உடல்நலனுக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குங்கள்’.. மத்திய அரசுக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!

மக்களின் உடல்நலனுக்காக அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் உடல்நலனுக்காக அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும், செலவிட வேண்டும், மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என மத்திய அரசை மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்பு மேலாண்மையில் தீவிரமான குறைபாடுகள் இருப்பதால் அதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு கவனிக்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நிரந்தரம்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த நிதின் கட்கரி..!!

மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில் “மத்திய பட்ஜெட்டில் மக்களின் சுகாதாரத்துக்காக 2 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் 2.5% ஒதுக்கப்பட்டநிலையில் அதைவிடகுறைந்துவிட்டது. வழக்கமாக பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துச் செல்லும் ஆனால், இங்கே குறைந்து 1.9% மாக இருக்கிறது. 148.42 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்துக்கு இது போதுமா.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மத்திய அரசு ஏன் தொகுதி மறுசீரமைப்பு செய்கிறது. நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக பிறப்புக்கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும், இதன்பின் தொகுதி மறுசீரமைப்பு செய்யலாம்.

தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன, வடமாநிலங்கள் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், குடும்ப நலத்திட்டங்கள் ஆகியவற்றில் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தென் மாநிலங்கள் எப்போதும் முதலில் நிற்கின்றன, அப்படியிருக்கும்போது நாங்கள் ஏன் பலியாக வேண்டும், முதலில்வருவதால்தான் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். நீ்ட் தேர்வு கொண்டுவந்தபின், மருத்துவக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. பகவத் காரத் பேசுகையில் “பாஜக ஆட்சிக்கு வந்தபின் அதனுடைய கொள்கைகளால் மக்கள் வாழும் வயது அதிகரித்துள்ளது. 2014ல் மக்களின் சராசரி வாழும்வயது 67 ஆக இருந்தநிலையில் 2024ல் 70.7ஆக அதிகரித்துள்ளது.

சராசரி வாழ்நாளைவிட நம் மக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் மகப்பேறு இறப்பு வீதம் குறைந்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் 83% குறைக்கப்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகள் இறப்பு வீதமும் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சந்தீப் குமார் பதக் கூறுகையில் “தேசிய சுகாதார இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை மாநிலங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கவும், குறைந்த செலவில் சிகிச்சை பெறவும் உதவும். இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆய்வு செய்தபோது  80 சதவீதம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ராஷ்ட்ரி ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில் “நம்முடைய சுகாதார முறை என்பது, தனியார் சிகிச்சை மற்றும் முதலாளித்துவத்தை நம்பி இருக்கிறது. புதிய வகையான மருத்துவ ஏழ்மை உருவாகியுள்ளது, நமது பொது சுகாதாரம் சீர்குலைந்தால், இந்தியாவின் சுகாதாரம் மோசமடையும்” எனத் தெரிவித்தார்
 

இதையும் படிங்க: பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share