×
 

விபத்தில் படுத்த படுக்கையான மாணவர்.. வலியுடன் பொது தேர்வு எழுதி நெகிழ்ச்சி..

மதுரையில் விபத்தில் சிக்கிய பிளஸ் 1 மாணவன் உதவியாளரின் உதவியுடன் தேர்வு எழுதிய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பிளஸ் 1 படித்து. இந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மாணவன் தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்துக்காக காத்திருந்தபோது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர் தினேஷுக்கு கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று தொடங்கிய பொதுத் தேர்வில் மாணவர் தினேஷ் பங்கேற்று தேர்வு எழுத ஆர்வம் தெரிவித்து  உள்ளார். பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் முயற்சிக்க நினைக்காத நிலையில் மாணவ அண்ட் தினேஷ் ஆர்வம் காட்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தேர்விற்கு ஆம்புலன்சில் வந்து இறங்கிய மாணவி.. கல்வியை கைவிடாத மாணவிக்கு குவியும் பாராட்டு! 

இந்த நிலையில் முதல் நாள் நடைபெறும் தமிழ் மொழி தேர்வை கடுமையான காயங்களுடன் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே, மாணவ தினேஷ் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தொடங்கிய பொதுத் தேர்வை முன்னிட்டு, எழுந்து நிற்க மற்றும் நடக்கவே முடியாத நிலையில் மாணவர் தினேஷ் காயத்துடன்  தேர்வரைக்கு சென்றார்.

தொடர்ந்து உதவியாளர் ஒருவர் உதவியுடன், தனது தேர்வை எழுதியுள்ளார் மாணவர் தினேஷ். முன்னதாக சிறுவயதிலேயே அவரது தந்தையை இழந்த மாணவர் தினேஷ் தாயின் ஆசை மற்றும் கனவை நிறைவேற்றுவதற்காக வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் பொது தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தொடங்கியது ப்ளஸ் 1 பொதுத்தேர்வு... 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share