கடலூரை உலுக்கிய கௌரவ கொலை வழக்கு..! உச்சநீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு..!
கடலூரை உலுக்கிய கௌரவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூரில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதியினர் கடந்த 23ஆம் ஆண்டு கௌரவ கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொன்றதுடன் சடலங்களை எரித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சாதி ஆணவ படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு சிபிஐ வசம் வழக்கு சென்றது. 15 பேரை குற்றவாளிகளாக சிபிஐ சேர்த்த நிலையில், இந்த வழக்கு கடலூர் எஸ்சி எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வெள்ளாற்றில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்த சோகம்..! கதறி துடித்த பெற்றோர்..!
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மருது பாண்டியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. படுகாயம் அடைந்த 18 பேர் கதி?