×
 

ரேபிஸ் நோயாளிகளுக்கு உயிர்துறக்கும் உரிமை: உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 10ம் தேதி விசாரணை

ரேபிஸ் நோயாளிகளுக்கு உயிர்துறக்கும் உரிமை: உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 10ம் தேதி விசாரணை

ரேபிஸ் நோயாளிகளுக்கு உயிர்துறக்கும் உரிமை: உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 10ம் தேதி விசாரணை
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோய் வந்தவர்களை கவுரவமாக உயிர்துறக்கும் உரிமை அல்லது சிகிச்சையை நிறுத்தி(passive euthanasia) உயிர்துறக்க அனுமதிக்கும் மனு குறித்து உச்ச நீதிமன்றம் நாளை(பிப்ரவரி10) விசாரணை நடத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் பிஆர் காவே,  கே.வினோத் சந்திரன் அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளனர். “ஆல் கிரியேச்சர்ஸ் கிரேட் அன்ட் ஸ்மால்” எனும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“ஆல் கிரியேச்சர்ஸ் கிரேட் அன்ட் ஸ்மால்” தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.

வெறிநாய் கடியால், ரேபிஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளிப்பதிலிருந்து நிறுத்துவிட்டு, அவர்களை கவுரமான முறையில் உயிரிழக்க, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவர்களை நாட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

இதையும் படிங்க: கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பா.ஜ.க. முதல்வர்? முன்னாள் நடிகர் மனோஜ் திவாரி பெயரும் அடிபடுகிறது

தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் “ மக்களுக்கு உயிர்வாழ்வதற்கான உரிமை இருக்கும்போது, உயிர்துறப்பதற்கான உரிமையும் இருக்கிறது, உயிர்துறக்கும் நிலையில் இருப்பவோருக்கு சிகிச்சையை நிறுத்தும் முறையை அனுமதிக்க வேண்டும். வாழும் உரிமையை அங்கீகரிக்கும் இந்த நீதிமன்றம், நீண்டநாள் நோயுற்று தேராதவர்கள், உடல்இயக்கமின்மையில் இருப்பவர்கள் இனிமே எந்த மருத்துவ சிகிச்சையாலும் தேறமாட்டார்கள் என கைவிடப்பட்டவர்கள், லைப் சப்போர்ட்டில் இருப்போருக்கு மருத்துவ சிகிச்சையை நிறுத்துவது அல்லது கவுரவமான முறையில் உயிர்துறக்க அனுமதிக்கலாம்.” எனத் தெரிவித்தது.

2020ம் ஆண்டு  இதேபோன்ற பொதுநலன் மனு விசாரணைக்கு வந்தபோது, அதில் பதில் அளிக்க மத்திய சுகாதாரத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
என்ஜிஓ ஏசிஜிஏஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர் ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ ரேபிஸ் நோய் ஒருவருக்கு வந்தவிட்டால் 100 சதவீதம் இறப்புதான். ரேபிஸ் நோய் மற்ற நோய்களை விட இது மிகவும் வேதனையானது மற்றும் கொடூரமானது” எனத் தெரிவித்தார்.

மேலும், ரேபிஸ் நோயின் அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நோயாளிகள் கட்டிவைக்கப்படுவது, படுக்கையில் உழல்வது, சுதந்திரம், இயக்கம், கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டை கடுமையாக ரேபிஸ் கட்டுப்படுத்துகிறது. இந்த நோயின் இயல்புத்தன்மையை அறிந்து, நோய்தீர்க்கும் மருந்து இல்லாத நிலையை உணர்ந்து, சிறப்பு கவனம் மூலம் கவுரமான உயிர்துறப்புக்கு அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுட்டு கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகள்..! இரண்டு வீரர்கள் வீரமரணம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share