‘மும்பை தாக்குதல் திட்டம் அமெரிக்காவுக்கு முன்பே தெரியும், முக்கிய நபரை பதுக்கியிருக்கிறது’.. முன்னாள் உள்துறை செயலர் பகீர் தகவல்..!
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தஹவூர் ராணாவுக்கு சிறிய பங்குதான் இருக்கிறது, ஆனால், மூளையாக செயல்பட்ட முக்கியக் குற்றவாளியை அமெரிக்கா பாதுகாப்பாக பதுக்கிவைத்துள்ளது என முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
64 வயதான தஹவூர் ராணா பாகிஸ்தானில் பிறந்து, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர். 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணா மூளையாக இருந்து செயல்பட்டு பல்வேறு உதவிகளை செய்தவர். இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு மூளையாக இருந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மெனுக்கு உதவியாக தஹவூர் ராணா இருந்தார். ராணாவை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் இந்திய அரசு எடுத்தது. ஆனால் இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ராணாவை இந்திய அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஹவூர் ராணா நாளை புதுடெல்லி அழைத்து வரப்படுகிறார். புதுடெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ராணாவை ஆஜர்படுத்த திட்டமிட்டிருப்பதால், அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!
இந்நிலையில் முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு பேட்டிளித்தார். அதில்அவர் கூறியதாவது:
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தஹவூர் ராணாவுக்கு சிறிய பங்குதான் இருக்கிறது. ஆனால், தாக்குதில் மூளையாக இருந்து செயல்பட்டது, அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மென். மும்பை தீவிரவாதத் தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே அமெரிக்காவுக்குத் தெரியும், அதனால்தான் ராணாவின் பள்ளித் தோழலான கோல்மெனுக்கு உதவியாக செயல்படவும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவும் அமெரிக்கா அனுமதித்தது.
ஹெட்லி அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப்படைக்கும் ஏஜென்ட் போல் செயல்பட்டார். 2009ம் ஆண்டு ஹெட்லியை நாங்கள் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது அதை அமெரிக்கா தடுத்துவிட்டது. அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் ஹெட்லி மும்பைக்கு வந்தார். மும்பையில் அவரை நாங்கள் கைது செய்திருக்கலாம். ஆனால் ஆதாரங்களை திரட்டவில்லை. அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள், வேறு யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை.
தஹவூர் ராணாவுக்கு மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிறிய பங்குதான் இருக்கிறது, இதில் மிகப்பெரிய பங்கு மூளையாக செயல்பட்டது ஹெட்லிதான். அவரைத்தான் இந்தியாவுக்கு கடத்த வேண்டும். ஆனால், அவரை அமெரிக்கா பாதுகாத்து, தடுத்து வைத்துள்ளது. 2009ம் ஆண்டில்நான் உள்துறை செயலராக இருந்து அமெரிக்காவில் ராணாவையும், ஹெட்லியையும் போலீஸார் கைது செய்தனர் ஆனால் அவர்களை இந்தியா கொண்டுவர முடியாதவகையில் அமெரிக்கா தடுத்தது.
அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதலுக்குப்பின் ஹெட்லி பலமுறை அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்து அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். தொடக்கத்தில் அவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்பதை இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கவில்லை ஏனென்றால் அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட்இருந்தது. பாகிஸ்தான் அடையாளத்தை தெளிவாக மறைத்து, அமெரிக்க பாஸ்போர்ட் பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!