தமிழக அமைச்சரவை மாற்றம்... அதிகாரப்பூர்வ இலாகாக்கள் அறிவிப்பு... செந்தில் பாலாஜி- பொன்முடி விடுவிப்பு..!
நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் அமைச்சராக தொடர வேண்டுமா? ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என நீதிமன்றம் கறாராக கூறி 28ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாகவே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல் தொடர் சர்ச்சைப் பேச்சுக்களில் சிக்கிய அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ பேச்சால் கட்சிப்பதவியை இழந்தார். உயர்நீதிமன்றமும் கடுமை காட்டியதால் பொன்முடியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேவேளை, ‘கட்சிப் பதவியும் இல்லாமல், அமைச்சர் பதவியும் இல்லாமல் இருந்தால் மரியாதையாக இருக்காது.சட்டமன்ற கொறடா பதவியாவது கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார் பொன்முடி.
இருவரது அமைச்சர் பதவிகளும் காலியாகி உள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!