×
 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நியூ வானிலை அப்டேட்..!

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அதனை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து மக்கள் தங்களை ஓரளவு தற்காத்துக் கொள்ள முடிகிறது. ஆங்காங்கே பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது வானிலை மையம் மழை நிலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவத தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. 

இதையும் படிங்க: ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!

இன்று முதல் 11ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறி இருந்தது. 

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் மேலெடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் டார்கெட்... அடித்துப் பொளக்கப்போகும் மழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share