×
 

உங்க வீட்டு பிள்ளைங்கள இந்தி படிக்க வைச்சுட்டு பொது இடத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பீங்களா.? திமுகவை தெறிக்கவிட்ட தமிழிசை.!

ரயில் நிலையங்களில் இந்தி இல்லாவிட்டால் வெளிமாநிலத்தவர் எப்படி ஊர் பெயர்களைப் புரிந்து கொள்வர்.

திமுகவினர் தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைத்துவிட்டு பொது இடத்தில் உள்ள பலகையில் இந்தி எழுத்துகளை அழிக்கின்றனர் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால், தமிழக அரசுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதையடுத்து தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவினர் பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, திருத்தணி, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களில் பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் சென்னையில்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது  தமிழிசை பதிலளிக்கையில், "தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என அரசு மாணவர்களுக்கு தேவையானவை இருக்கிறது. தமிழக முதல்வரின் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள்? இது அனைவருக்கும் தெரியும்.

தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்கிறார்கள். ஆனால்,  பொது இடத்தில் உள்ள பலகையில் இந்தி எழுத்துகளை அழிக்கின்றனர். பொதுமக்களின் சொத்துகளை சேதப்படுத்த இவர்களுக்கு உரிமை கிடையாது. இந்தி இல்லாவிட்டால் வெளிமாநிலத்தவர் எப்படி ஊர் பெயர்களைப் புரிந்து கொள்வர். இருமொழிக் கொள்கை மூலம் ஆங்கிலத்தை வளர்த்து உலக அரங்கில் பிரபலமானோம் என முதல்வர் கூறுகிறார். அப்போ தமிழை வளர்க்கவில்லை. இவர்கள் ஆங்கிலத்தை வளர்ப்பார்களே தவிர, இன்னொரு இந்திய மொழியை வளர்க்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!

மொழிப் பிரச்சினையை வைத்துக்கொண்டு திமுக ஆட்சியில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம், நீட் ஆகியவற்றை ஸ்டாலின் தடுக்கிறார். பிரதமரின் மக்கள் மருந்தகத்தை பெயர் மாற்றி அமல்படுத்தி உள்ளனர். மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது." என்று தமிழிசை தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாயை விட்டு வசமாக சிக்கிய பாஜக மத்திய அமைச்சர்... வச்சி செய்ய நாள் குறித்த தமிழக காங்கிரஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share