×
 

நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை.. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்காக நிதி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் திட்டமான நடந்தாய் வாழி காவிரி எனும் திட்டத்திற்கு நிதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கழிவு நீரால் மாசுபட்டுள்ள காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட நடந்தாய் வாழி காவிரித் திட்டத்தில் மாநில அரசின் நிலை என்ன என்று திருச்செங்கோடு உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: ரூ.120 கோடியில் தூர்வாரும் பணிகள்.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்..!

அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார். அப்போது, காவிரி மற்றும் அதன் 5 கிளை ஆறுகளான திருமணிமுத்தாறு, தரபங்கா, அமராவதி, பவானி மற்றும் நொய்யல் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல்,புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை தான் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நோக்கம் என்று கூறினார். இந்தத் திட்டத்தினை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள உள்ளதாகவும், காவிரி ஆறு மேட்டூரில் இருந்து திருச்சி வரையிலும் மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகள் என்றும் திருச்சியில் இருந்து கடல் முகத்துவாரம் வரை என இரண்டாவது கட்டமாகவும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முதற்கட்டமாக மொத்த திட்ட மதிப்பீடு ரூ.934.30 கோடி என்றும் இதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம். அதாவது ரூ.560.58 கோடி. மாநில அரசின் பங்கு 40 சதவீதம். அதாவது ரூ.321.72 கோடி என தெரிவித்தார். இதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த 25 வருஷத்துக்கு தொகுதி மறுசீரமைப்பு பேச்சே வேண்டாம்..! சட்டசபையில் முதலமைச்சர் உரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share