×
 

தமிழக பட்ஜெட் தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு... தீயாய் களத்தில் இறங்கிய தங்கம் தென்னரசு...! 

2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துறை ரீதியிலான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துறை ரீதியிலான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்றைய தினம் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு 202- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளார். மேலும் பேரவை விதி 193 ஒன்றின் கீழ் 2025 26 ஆம் ஆண்டுக்கான முன்ப மானியக் கோரிக்கைகள் பேரவை விதி 189 ஒன்றின் கீழ் 2024 25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளையும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அப்பாவு தெரிவித்தார்.
தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து வருகிற 2025 மார்ச் மாதம் 14 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 9:30 மணிக்கு கூட்டியுள்ளேன் அன்றைய தினம்  நிதி அமைச்சர் அவர்கள் 2025 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார். 

 

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை தயாரிப்பதற்காக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் 25 மற்றும் 26 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது இந்த நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துக்கேற்பு கூட்டமானது நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான கருத்துக்கே கேட்பு கூட்டமானது சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. 

இதையும் படிங்க: செங்கோட்டையன் மீது கை வைத்தால்... தலைமையில் மாற்றம் ஏற்படும்..! எடப்பாடியாருக்கு கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!

பட்ஜெட் மதிப்பீடு பொறுத்தவரையில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் தமிழக அரசின் முன்னுரிமை திட்டங்கள் என்னென்ன உள்ளது. அந்த திட்டங்களின் செயல்பாடு என்ன? வரும் 2025 நிதி ஆண்டில் அந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக அனைத்து துறைகளுடன் நிதி அமைச்சர் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். 

இன்று சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட  ஐந்து துறைகளுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. நாளைய தினம் வணிக வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான கருத்து கேட்பு கூட்டமானது நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் தொழில் துறை சிறு மற்றும் சிறு நடுத்த தொழில் துறை
உள்ளிட்ட துறைகளுடான கருத்து கேட்பு கூட்டமானது நடைபெறவுள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டங்கள் முடிந்த பிறகு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை எதிர் செய்யும் பணியானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அம்மா அம்மா தான்.. இறப்பிலும் பலருக்கு வாழ்வு தந்த தாய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share