எகிறிய மின் கட்டணம்.. மூன்றாவது முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலு.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்க TANGEDCO-க்கு உத்தரவு...
சென்னையில் மின்மீட்டரில் தவறான கணக்கீடு காட்டுவதை நிரூபித்த பெண்ணுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இழப்பீடு வழங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகமான மின் கட்டணம் வந்துள்ளது. இந்த கட்டணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ருக்மணி இது குறித்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மின் கணக்கீட்டை சரிபார்த்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஆய்வகளுக்கு பின்னர் மின்சார மீட்டர் சரியான முறையில் செயல்படுவதாகவும், மின் கணக்கீட்டில் தவறு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அந்த முறை ருக்மணி மின் கட்டணம் செலுத்தியதை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறைகளும் மின் கட்டணம் கணக்கீடு தொடர்ச்சியாக அதிக அளவிலே இருந்துள்ளது.
இதையும் படிங்க: பழைய காற்றாலைகளை அகற்ற திட்டம்.. மின்வாரியத்தில் தனியார்மய நாட்டமா..?
ருக்மணி அதிக அளவில் பயன்படுத்தாத போது மின் கட்டணம் மட்டும் அதிகரித்தே வந்துள்ளது, அவரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்வதென்று அறியாத ருக்மணி இந்த விவகாரம் குறித்து தீர்வு காண குறைதீர் மையத்தை நாடியுள்ளார்.
அப்போது அவர் வீட்டின் மின்மீட்டர் சம்பந்தப்பட்ட பரிசோதனை கூட்டத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் மீட்டரில் கோளாறு இல்லை என்றும் மீண்டும் அதே பதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு மின் மீட்டர் அனுப்பப்பட்டது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மூன்றாவது முறை சோதனையில் மின்மீட்டரில் பழுது இருப்பது தெரிய வந்தது.
இன்னும் மூன்று சோதனை காலகட்டத்தில் ருக்மணி சுமார் 30,000 மின்கட்டணமாக செலுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து ருக்மணி இழப்பீடு மற்றும் சேவை குறைபாட்டிற்காக மீண்டும் குறைதீர் மையத்தை நாடியுள்ளார். அப்போது அவரது கோரிக்கை விசாரித்த ஆணையம் அவருக்கு ரூபாய் 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!