×
 

காளி அவதாரத்தில் மிரட்டும் விமல்... ஓடிடி வெளியிட்ட சூப்பர் டீசர்!!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. 
தமிழ் திரையுலகில் போட்டிப்போட்டு கொண்டு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஓடிடி வந்ததில் இருந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படங்களும் தியேட்டருக்கு வராமல் ஓடிடி தளத்தில் வசூலை வாரி குவித்து வருகின்றன. இதனால் தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி எப்பொழுதும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் மோடில் வைத்துள்ளன.

அந்த வகையில் விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் டீசர் வெளியாக உள்ளது. எப்பொழுதும் வித்தியாசமான கேரக்டர்களையும், கதை களத்தையும் தேர்வு செய்யும் விமல் நடிப்பில் எதார்த்தை காட்டக் கூடியவர். அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரில் விமர் காளி அவதாரம் எடுத்துள்ளார். கிராமத்தை கதை களத்தை கொண்டதாக காட்டப்படும் டீசரில், குரோதம், ரத்தம், பழிவாங்கல் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..!

அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என பழக்குழு தெரிவித்துள்ளது. ஆக்‌ஷன் , கலாச்சாரம், பழிவாங்கல், பாசம் என அனைத்து தரப்பில் கையாண்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' படம் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளதால் காளி நடனம், கொண்டாட்டம் போன்ற காட்சிகள் தத்ரூமாக உள்ளன. 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதால், டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த போகுமிடம் வெகுதூரமில்லை, சார் போன்ற படங்கள் நல்ல வரவேறை பெற்றன. இதேபோல் விலங்கு வெப் தொடரும் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக விமலின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' விமலின் நடிப்பை மேலும் மெருக்கேற்றி இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share