×
 

தெலங்கானா சுரங்க விபத்து.. மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிப்பு..!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் இடிபாடுகளில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தில் தோமலபென்டா பகுதி அருகே சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திடீரென சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் இருந்து சிலர் தப்பிய போதும் எட்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.பணியில் இருந்த இரண்டு பொறியாளா்கள், இரண்டு ஆப்பரேட்டா்கள், நான்கு தொழிலாளா்கள் என மொத்தம் எட்டுப் போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.

இதையும் படிங்க: மனிதர்கள் இருப்பதை கண்டறிந்த நாய்கள்..! தெலுங்கானா சுரங்க விபத்தில் ட்விஸ்ட் 

14 கிலோமீட்டர் நீள சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கும் பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தை இயற்கை பேரிடராக அரசு அறிவித்து இருந்தது.

ஏற்கனவே கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை நடைபெற்ற நிலையில் இடிபாடுகளும் சிக்கி இருந்த ஒரு தொழிலாளியின் உடல் கடந்த ஒன்பதாம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலையில் ஒரு மாதத்தை கடந்தும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று மற்றொரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது 

சுரங்கத்தின் கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் காணப்பட்டதாகவும் அந்த உடலை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நீக்கப்பட்ட பிறகு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் மேலும் ஆறு தொழிலாளிகளின் உடலை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் 25 அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 700 பணியாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share