×
 

மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டியில் அமைய இருந்த டங்கஸ்டன் சுரங்க ஏலப் பணிகளை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின்  உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!  இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது! என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கிய போது தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஏலம் முடிந்த பிறகே தனது எதிர்ப்பை பதிவு செய்தது என்பதும் மத்திய அரசின் வாதம். 

இதையும் படிங்க: 'திமுகவை ஜெயிக்க வைக்கும் சூட்சம் என்னிடம்தான் இருக்கிறது..' எஸ்.வி.சேகர் அதிரடி..!

எது எப்படியாயினும், அரிட்டாபட்டி மக்கள் ஆரம்பம் முதலே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே...

இதையும் படிங்க: ‘கருப்பு துப்பட்டாவுக்கே பீதியானவர் கருப்பு சட்டையை பார்த்து சிரித்தாராம்..!’ ஏளனமாக பேசிய முதல்வருக்கு அதிமுகவினர் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share