'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!
காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது.
''திமுக கொடி கட்டி காரில் வந்தாலே அவர்கள் திமுகவினர் என அர்த்தம் கொள்ளக் கூடாது'' என விசிகலைவர் திருமாவளவன் கூறியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. சென்னை,ஈ.சி.ஆரில் இளம்பெண்கள் வந்த காரை, கட்சி கொடி கட்டிய காரில் சில இளைஞர்கள் கும்பலாக துரத்திய சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது.
கடந்த 26ஆம் தேதி இரவு ஈசிஆர், முட்டுக்காடு பாலம் அருகே தனது குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தபோது சபாரி காரிலும், கருப்பு நிற தார் காரிலும் வந்த இளைஞர்கள் தன்னை கேலி செய்யும் விதமாகவும், தன் காரை முன் சென்று குறுக்கே நிறுத்தி மிரட்டியதாகவும், தங்கள் காரை நிறுத்திய போது அந்த இளைஞர்கள் இறங்கி வந்து தங்களிடம் விவகாரம் செய்ததாகவும், பின்னர் தங்கள் காரின் பின்னால் வந்த வீடு வரை பின் தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாகவும் அந்தப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த எட்டு இளைஞர்களை தேடி வருகிறார்கள். அந்த சஃபாரி காரில் திமுக கொடி கட்டி இருந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. புகார் அளித்த பெண் பயணித்த காரில் மூன்று பெண்கள் ஒரு ஆண் ஒரு கைக்குழந்தை இருந்ததாக தெரிவித்துள்ளனர். துரத்தி வந்த இளைஞர்கள் 8 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!
ஆனால் அந்த இளைஞர்கள் சென்ற காரை உரசி விட்டு மன்னிப்பு கேட்காமல் சென்றதால் துரத்திச் சென்றதாக அந்தப்பெண்ணின் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். திமுக கொடி கட்டிய காரில் இளைஞர் சென்று மிரட்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எதிர் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், ''திமுக கொடி கட்டி காரில் வந்தாலே அவர்கள் திமுகவினர் என அர்த்தம் கொள்ளக் கூடாது. சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இளம் பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. இருப்பினும்டவடிக்கை தேவை'' எனத் தெரிவித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
“எவ்வளவு கேவலமா வேணும்னாலும் வாழு... வைகோ மாதிரி மட்டும் வாழ்ந்துறாத” என்று ஒரு வாக்கியம் இருக்கும்! இப்போ காலம் மாறிடுச்சு.“வைகோவ மாதிரிக்கூட வாழு..திருமாவளவன் மாதிரி வாழ்ந்துறாத” இது திருமா காலம்'' என பலரும் திருமாவுக்கு எதிராக பொங்கியெழுகின்றனர்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!