கல்யாண பெண் மீது வெடித்த குண்டு... விபரீதத்தில் முடிந்த வெட்டிங் போட்டோஷூட்!!
திருமணத்திற்கு முந்தைய போட்டோஷீட் நடத்த திட்டமிட்ட மணமக்களுக்கு நேர்ந்த விபரீத சம்பவம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைகாலமாக வெட்டிங் போட்டோஷீட் என திருமண கோடிகள் செய்யும் அலும்புகள் ஏராளம். அவ்வப்போது அவ்வாறு போட்டிஷீட் செய்யும் தம்பதிகள் சிக்கல்களில் மாட்டிகொள்வதில் தொடங்கி உயிரிழப்பது வரை பல சம்பவங்கள் நடந்துள்ளன. இன்னும் சில ஜோடிகல் எல்லைமீறிய ஆபாசமாகவும் வெட்டிங் ஷூட் நடத்துகின்றனர். அதிலும் பேண்டசி என கூறிகொண்டு சமீபத்தில். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி சுடுகாட்டு தீம்மில் போட்டோ ஷூட்டை நடத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இந்த நிலையில், பெங்களூரில் போட்டோஷீட் நடத்திய தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதத்தை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர்கள் விக்கி – பிரியா தம்பதி. இவர்கள் கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர். இவர்கள் வெளிநாட்டிலிருக்கும் போது ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவ்ய் செய்த அவர்கள் தங்களது சொந்த ஊரான பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். அங்கு திருமணத்துக்கு முந்தைய போட்டோ ஷூட் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்.. கணவன், மனைவி உட்பட 3 பேர் பலி..!
அதற்காக அங்குள்ள திறந்தவெளி தோட்டம் ஒன்றையும் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதை அடுத்து மிக பிரமாணடமக போட்டோஷூட் நடத்த திட்டமிட்ட அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதில் வண்ணங்கள் கொண்ட புகை குண்டுகள் வெடிக்கும் போது போட்டோ எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை ஏற்பாடு செய்துள்ளனர். இதன் பின் போட்டோ ஷூட்டிற்காக மணமக்கள் இருவரும் அலங்காரம் செய்து கொண்டு போட்டோ எடுக்க தொடங்கினர். அப்போது மணப்பெண்ணை மணபெண்ணை தூக்கி வைத்திருப்பது போல போட்டோ எடுக்க ஆசைப்பட்ட மணமகன், பெண்ணை தூக்கியுள்ளார்.
அப்போது, திடீரென வண்ணப்புகை குண்டுகள் வெடிக்க தொடங்கின. அதில் ஒரு குண்டு மணப்பெண்ணின் மீது விழுந்து வெடித்தது. இதில் மணப்பெண்ணின் முகுது, வயிறு, இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த மணப்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் மணப்பெண்ணின் தலைமுடியும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 4 பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!!