×
 

இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் வெளியானது! நீங்கள் நினைக்கும் பெயர் அல்ல!

உலகில் பெரும்பகுதி மக்களால் கடைபிடிக்கப்படும் கிறிஸ்துவ மதத்தின் இறைத்தூதரும், கடவுளாக வணங்கப்படும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்து மொழி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் குறித்து அமெரிக்காவில் வெளிவரும் “தி நியூயார்க் போஸ்ட்” நாளேடு இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்ந்தபோது ரோமாபுரியில் ஆட்சியில் இருந்த பேசப்பட்ட மொழி ஆங்கிலம் இல்லை, அப்படி இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. இயேசு வாழ்ந்தபோது அங்கு அராமியா மொழியில்தான் பேசியிருக்க வேண்டும், அதுதான் அவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
யூதர்கள் மக்களிடத்தில் அவர்கள் வாழ்ந்த கலிலியா பகுதியில் அராமியா மொழிதான் பரவலாகப் பேசப்பட்டுள்ளது. இயேசு பிறந்ததும் கலிலியா பகுதியில் உள்ள நாசரேத் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகால கிரேக்க மொழிபெயர்ப்புகளும் கடவுளின் மகன் அராமி மொழியில் சில சொற்றொடர்களைச் சொன்னதைப் பதிவு செய்துள்ளன.


ஆய்வுக் கட்டுரைகள் இன்னும் உறுதியாகக் கூறுவது என்னவெனில் “ இயேசு வாழ்ந்த காலத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஜே(J) வார்த்தையும், உச்சரிப்பும் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள ஜே(j) என்ற எழுத்தும் அதன் ஒலி, உச்சரிப்பும் இயேசுவின் மரணத்திற்கு 1,500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எழுத்து மொழியில் தோன்றும். அதேபோல “கிறிஸ்து” என்பதும் உண்மையான குடும்பப் பெயரும் அல்ல, மாறாக “கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று பொருளாகும்.

கலிலியில் இரு பொதுவான பெயர்களான யேசுவா அல்லது யேசு ஆகிய இரு பெயர்களால் ஆண்டவரும், காப்பாளருமான இயேசு அழைக்கப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் அவரின் முழுப் பெயர், பண்டைய அராமி மொழியின்படி, “இயேசு நராசீன்” என்று இருந்திருக்கும். கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிள் முழுவதும் இயேசுவை 'நாசரேத்தின் இயேசு' அல்லது 'நசரேயனாகிய இயேசு' என்று குறிப்பிடப்படுகிறது. ஆதாலல், இயேசு அல்லது இயேசுவா என அழைக்கப்படும் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே இந்த வழிமுறையை அவர் இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என மொழி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கிறிஸ்தவர்கள் மீது 834 தாக்குதல்கள்: 2023 ஆண்டைவிட 2024ல் அதிகம்: யுசிஎப் தகவல்..


குரோஷியாவில் உள்ள ஜாக்ரெக் பல்கலைக்கழகத்தின் வரலாற்று அறிஞர் டாக்டர் மார்கோ மரினா கூறுகையில் “இன்று நாம் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் வகையில் ஒருவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் கடைசிப் பெயர் பலருக்கும் பழங்காலத்தில் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்றால், பிறந்த இடம், பெற்றோர், தங்களின் சிறப்புக் குணங்கள் மூலம் அடையாளப்படுத்தினார்கள். அதனால்தான் பைபிளில் இயேசுவை நாசரேத்தின் இயேசு அல்லது 'நசரேயனாகிய இயேசு' என்று அவர் பிறந்த இடத்தை வைத்து குறிப்பிடப்படுகிறது. அங்கு பேசப்பட்ட அராமி மொழியில் “இயேசு நரசேன்” என்பதாகும்.


இயேசு நசரேன் என்பது நாசரேத்தின் இயேசு என்று மாறியது எப்படி...?
இயேசுவின் உண்மையான பெயர் “இயேசு நரசேன்” என இருந்தால், எவ்வாறு இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார் என்ற கேள்வி எழும். எளிமையானது மொழிகளுக்கு இடையில் வரும் ஒலியை மொழிபெயர்க்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. வரலாற்று அறிஞர்கள், மொழி ஆய்வாளர்கள் கூற்றுப்படி, “புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, அறிஞர்கள் அராமி மொழி பெயரை ஏற்றுக்கொள்ள முயன்றனர், ஆனால் பேச்சுஒலி(phonetic) சிக்கலாக இருந்ததால் மாற்று தேர்வு செய்யப்பட்டு, இயேசு என்பது “லெஸ்ஸோ” என்று மொழிபெயர்க்கப்பட்டது.
புதிய ஏற்பாடு லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, “லெஸ்ஸோ”( lesous) என்பது “லெசோஸ்”( lesus) என்று மொழிபெயர்க்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில், ஆங்கிலத்தில் ஜே என்ற(j) என்ற ஒலி பரவலாகி, “லெசோஸ் “என்பது "இயேசு" என்று மாறியது - இது நவீன காலப் பெயரின் பிறப்புக்கு வழிவகுத்தது.


இந்தப் பெயர் மாற்றமே வியப்பாக இருந்தால், இயேசு கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25 அன்று பிறக்கவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் போப் ஜூலியஸ் I நான்காம் நூற்றாண்டில்தான் டிசம்பர் 25ம் தேதியைத் தேர்ந்தெடுத்தார், பழங்கால ரோமாபூரியில் டிசம்பர் 25ம் தேதி என்பது பேகன் சாட்டர்னாலியா பண்டிகை நடைபெறும் அதே நாளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share