×
 

வெற்றிகரமாக நிகழ்ந்த தேஜஸ் போர் விமான சோதனை! துல்லியமாக தாக்கி அழித்த ஆஸ்ட்ரோ

ஒடிசா கடற்கரையில் தேஜஸ் போர் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது.

எச்ஏஎல் தேஜஸ் என்பது இந்திய ஒற்றை எஞ்சின், 4.5 தலைமுறை பல்பணி போர் விமானமாகும். இது டெல்டா இறக்கை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி-ஆல் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படைக்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்தது ஆகும்.

இதையும் படிங்க: வெறும் ரூ.1199க்கு விமானத்தில் போகலாம்.. ஹோலி பண்டிகை சலுகை வந்தாச்சு.!!

தேஜாஸ் விமானம் 2001 ஆம் ஆண்டு தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டது. மேலும், 2015 ஆம் ஆண்டு IAF இல் சேர்க்கப்பட்டது. தேஜஸின் முதல் செயல்பாட்டுப் படைப் பிரிவு 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் 45வது படைப் பிரிவு ஃப்ளையிங் டாகர்ஸ் - MiG-21 பைசன்களில் இருந்து தேஜாஸுக்கு மாறிய முதல் விமானமாகும்.

தேஜஸ் 4000 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த ஒற்றை பைலட் விமானத்தின் அதிகபட்ச புறப்படும் எடை 13,300 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் என்பது எளிமையான வடிவமைப்பைக் கொண்ட குறைந்த விலை விமானமாகும்.

இந்தப் போர் விமானங்களின் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி, வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனை ஒடிசாவில் உள்ள சண்டிபூர் கடற்கரையில் நிகழ்த்தப்பட்டது. எதிர்பார்த்தபடியே, ஆஸ்ட்ரா ஏவுகணை வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. 

இந்த ஏவுகணையானது, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த தேஜஸ் போர் விமானம்.

இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனை வெற்றி என்பது முக்கிய மைல்கல் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருச்சி - யாழ்ப்பாணம் இடையே விமான சேவை... குட் நியூஸ் சொன்ன இண்டிகோ நிறுவனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share