'மேரா நாம் அப்துல் ரஹ்மான்...' என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை... இப்தாரில் இளகிய இ.பி.எஸ்
எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது. ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இயல்பாகவே வாழ்ந்து வரும் நான்.
''என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ''பதவிக்காகவும், புகழுக்காகவும் அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு தொண்டாற்ற அரசியலுக்கு வந்த தொண்டன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது. ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இயல்பாகவே வாழ்ந்து வரும் நான்.
இதையும் படிங்க: துபாயில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. கலந்துக்கொண்ட தமிழக நடிகர்!!
எல்லோருக்கும் சமநீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமாற நினைப்பவன் நான். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து, அன்பு செய்வதை நான் தலையாய கடமையாக கொண்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அரசியல் பயணம் ஒரு நதியின் பயணத்தை போன்றது. சில ஊற்றாக தோன்றி, ஓடையாக மாறி, அருவியாகி அமைதியாக மெல்ல நடந்து வயல்தோறும் விளைச்சலுக்கு பாயும் ஒரு நதியைப் போல நானும் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஓடிக் கொண்டு இருக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கின்றேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு துணை நின்றது போல், நாங்களும் உங்களுக்கு என்றும் துணை நிற்போம். புரட்சித்தலைவர் சொன்னதைப் போல் என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: விஜய்யின் இஃப்தார் அரசியல் சொல்லும் சேதி... உளவுத்துறை ரிப்போர்ட் ... திமுக ஆதரவு வாக்குகளை அள்ளுகிறாரா?