அரசியல் ஆதாயத்திற்கு தான் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறார்கள் - திருமா ஓபன் டாக்.
அரசியல் ஆதாயத்திற்காக தான் பாஜகவுக்கு ஆதரவாக முன்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அரசமைப்புச்சட்டப் பிரிவு 16(4A)வை நடைமுறைப்படுத்திடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடி பலமா இருக்கும்..! விசிக இல்லாமல் அரசியல் நகர்வே இல்லை: திருமா கர்வம்..!
முதலமைச்சர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து பதவி உயர்வு இட ஒதுக்கீட்டினை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
வருகிற ஐந்தாம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்த திருமாவளவன், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறு வரையறை நடைபெற உள்ள சூழலில், 2026க்கு பிறகு அதன் காலக்கெடு முடிவதால் தொகுதிகளுக்கான மறு வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருப்பதாக கூறினார்.
அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகள் முன்வைக்கும் வாதம் ஏற்புடையதாக இல்லை, மும்மொழி கொள்ளையை தமிழ்நாட்டு மக்கள் வரவேற்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது கவலை அளிப்பதாக கூறினார்.
இந்தி பேசக்கூடியவர்கள் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்காமல் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு ஆதரவாக பேசுவது அரசியல் ஆதாயத்திற்காக தான் என்று ஒரு குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அந்தப் பள்ளி யாருடையது அண்ணே..? சிக்க வைத்த அண்ணாமலை… மறுக்காமல் மழுப்பும் திருமா..!