×
 

திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!

மதரீதியான பிரச்னையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதா? என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலையை வைத்து மத ரீதியாக பிரச்சனை எழுந்ததில் இருந்தே மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை தான் கேள்விக்குள்ளாகி வந்தது. இந்நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே கருத்தை முன் வைத்திருக்கின்றன. இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த இடத்தில் திடீரென இவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகக் காரணம் என்ன? என்ற கேள்வி தான் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முக்கியமாக எழுதுகிறது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கும் விசிக தலைவர் தொல். திருமாவளவன், '' சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் தான் என்ற நிலையில் அதனை செலுத்த வந்த இஸ்லாமியர் ஒருவரை காவல்துறை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு பிறகு ஆடு கோழிகளை பலியிடக் கூடாது என வருவாய் கோட்டாட்சியரும் தடை விதித்த நிலையில் இந்த இரு நிகழ்வுகளும் தான் பிரச்னைக்கு மூல காரணம் என தெரிகிறது.

 போலீசரும், வருவாய் துறையினரும்  எதன் அடிப்படையில் அப்படி செயல்பட்டார்கள் என்ற கேள்விக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தான் தெளிவுபடுத்தி விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என 1923 ஆம் ஆண்டு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அந்த தீர்ப்பை பல நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திய போதும் கூட, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இந்த விவாகரத்தை சரியாக கையாளாததால் பழங்காநத்தம் போராட்டத்திற்கு வழி வகுத்து பதற்றத்தை உருவாக்கி இருப்பதாக பகிரங்கமாக திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.... வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் ...!

இதேபோல இது முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகத்தின் தோல்விதான் எனக்கூறி இருக்கும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன்,'' திருப்பரங்குன்றம் மலைக்கு சம்பந்தப்பட்ட உள்ளூர் மக்களோ, இந்து அறநிலையத்துறையோ, தர்கா நிர்வாகமோ அமைதியாக இருக்கும் போது, பாஜகவினரும், இந்து அமைப்புகளும் பிரச்னையை கிளப்புவதாகவும், வழிபாட்டு உரிமையில் காவல்துறை மற்றும் வருவாய் துறை எந்த அடிப்படையில் தலையிட்டது எனவும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி சூழலை கொண்டு வர வேண்டும் என திமுக அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகள் எழுதிக் கொடுத்த கடிதத்திற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா முறையாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக  செயல்பட்டதாக குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட முறையும் போராட்டத்திற்கு அனுமதி கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் விவாதித்த விதமும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல திருப்பரங்குன்றம் விகாரத்தை வைத்து மத கலவரத்தை தூண்டுபவர்களிடம் மென்மையான போக்கு தேவையா? என தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் இதுகுறித்து, ''அரசியலை ஆன்மீகத்தில் கலந்தால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இரும்பு கொண்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அடக்க வேண்டும். இதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய கோரிக்கை. முதலமைச்சர் இதில் மென்மையாக இருக்கக் கூடாது.
எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது'' என கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டதோடு ஒரு சார்பாக உத்தரவு பிறப்பித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஒரு சார்பாக நடந்து கொண்டதாக பகிரங்க புகார் எழுந்திருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மீதுதான் புகார் கூறியது என்ற நிலையில், மதரீதியான பிரச்னையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதா? என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

நல்லவேளை சங்கீதாவை ஓபனாக 'சங்கி' எனக் கூறாமல் விட்டார்களே..!

இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share