×
 

ஏப்ரல் 7ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம்..! லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ளதால் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற உள்ளது .

அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை, 96 அடி உயரம் கொண்டதாக உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. இந்த தேரோட்டத்திற்கான தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தேரில் பொருத்தப்பட உள்ள பொம்மைகள், திரைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!

ஆழித் தேரோட்டத்தையொட்டி, ஏப்ரல் 6தேதி இரவு 8 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் ஆழித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். அதை தொடர்ந்து 7-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர் காலை 9 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் ஆகியோர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளையும், ஆழித்தேர் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர். இதனிடையே, தேரோட்டத்தையொட்டி ஏப்ரல் 7ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு ... 'குடி' மகன்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share