அண்ணா அறிவாலயத்தில் நாதகவினர்... தாரைத்தப்பட்டை முழக்க வரவேற்பு... 3000 பேரைத் தட்டித்தூக்கிய ஸ்டாலின்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்து அவருடையது சொந்த கருத்து என்றும், அதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். மேலும் பெரியாரை வாய்க்கு வந்தபடி சீமான் வசைபாடியது தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல, மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டி ஏராளமான நாதக தொண்டர்கள் கட்சியை விட்டு விலக ஆரம்பித்தனர். நாம் தமிழர் கட்சியில் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தொடர்ந்து பெரியார் குறித்து அவர் பேசி வருவதால் சமுதாயத்தில் கட்சி மீதும், கட்சி தொண்டர்கள் மீதும் எதிர்ப்பு நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. பெருமையில் துள்ளிக் குதிக்கும் அண்ணாமலை!
சமீப காலமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பென்னாகரம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் தம்பிகள் ஏராளமானோரை கட்சியை விட்டு கொத்து, கொத்தாக விலகி வந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட் அக்கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூலமாக் வழங்கப்பட்டது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய ராஜீவ் காந்தி, மாவட்ட வாரியாக சீமான் மீது அதிருப்தியில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒன்று திரட்டினார். கிட்டத்தட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய வந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தூண்டு போட்டு கட்சியில் இணைத்துக்கொண்டார். முன்னதாக திமுகவில் இணைவதற்காக அணி, அணியாக அண்ணா அறிவாலயம் வந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தாரைத் தப்பட்டை முழுக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்!