×
 

ஜூலை மாத தரிசனம்... திருப்பதி ஏழுமலையான் கோயில் முக்கிய அறிவிப்பு...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி ஜுலை மாதத்திற்கான தரிசன டிக்கெட்களின் கோட்டா தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுலை மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மராதனை சேவைகளுக்கான ஜூலை மாத குலுக்கல் டிக்கெட் பெற ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

இந்த சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் பதிவுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைனில் பணம் செலுத்தி அவர்களுக்கு உண்டான டிக்கெட் பெறலாம்.

இதேபோன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்காக ஏப்ரல் 22ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

இதையும் படிங்க: ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம்.. இதில் வணிகத்திற்கு இடமே கிடையாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..!

இதே சேவைக்கு நேரில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

ஜூலை மாதத்திற்கான அங்கபிரதட்சனம் இலவச டோக்கன்கள் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடும்.

மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஏப்ரல் 23 ம் தேதி ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

ஜூலை மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனடிக்கெட்கள் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். திருமலை மற்றும் திருப்பதியில் ஜூலை மாதத்திற்கான அறைகள் பெற 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம்.. இதில் வணிகத்திற்கு இடமே கிடையாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share