×
 

#BREAKING-- UPDATE -- திருப்பதியில் தள்ளு முள்ளு! கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி: 50 பேர் காயம்

திருப்பதியில் கூட்டநெரிசலில்

திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதி திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்ததால் இன்று(புதன்கிழமை) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி (நாளை) திருநாளில் சொர்க்க வாசல் திறக்கப்படும். இதைக் காண ஏராளமான பக்தர்கள் வைணவத் திருத்தலங்களுக்குச் செல்வார்கள்.
திருப்பதியிலும் வைகுண்ட ஏகாதசி திருநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரேநாளில் குவிவார்கள். அதன்படி வைகுண்ட ஏகாதசி திருநாள் நாளை இரவு வருவதால் சொர்க்க வாசல் திறப்பைக் காண ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் இன்றிலிருந்தே வரத் தொடங்கினர்.


சிறப்பு தரிசன டிக்கெட் பெறவும், தரிசன டிக்கெட் பெறவும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் இன்று குவிந்ததால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதிவரை நடக்கிறது. 

இதையும் படிங்க: #BREAKING --திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்


இதற்கான  டோக்கன் வழங்கும் மையங்களில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது, டோக்கன் வழங்கும் மையம் காலை 5 மணிக்குத் திறக்கப்படும் இருப்பினும் வரிசையில் நிற்கவும், டோக்கனை விரைந்து வாங்குவதற்கு பக்தர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு சென்றதால் நெரிசல் அதிகமாகி கீழே விழுந்தனர்.


ஸ்ரீனிவாசம், பைராகிபேட்டடா ராமநாயுடு பள்ளி மற்றும் சத்யநாராயணபுரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கடும் நெரிசல் ஏற்பட்டது.  இதில் ஸ்ரீனிவாச பகுதியில் ஒரு பெண் உயிரிழந்தார், ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்த பக்தர்கள் அருகே இருக்கும் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டனர்.


விஷ்னு நிவாசம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிரிழந்த பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.


திருப்பதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்தது, காயமடைந்த செய்தி கேட்டு முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த வேதனை தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு விரைவாக மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு நிலவும் சூழல், ஏற்பாடுகள், பக்தர்கள் கூட்டத்தைக் குறைக்க ஏற்பாடுகள், உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் தொலைப்பேசி வாயிலாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டு அறிந்தார் என்று முதல்வர்அலுவலகம் தெரிவித்துள்ளது.


வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்துக்காக திருப்தியில் 8 இடங்களில் டோக்கன் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த டோக்கன் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதிவரை வழங்கப்படுகிறது. ஏராளமான போலீஸார், ரோந்து போலீஸார், இருந்தும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு வந்ததால் அதை சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 


மேலும், பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக வந்துள்ளது, இந்த அளவு பக்தர்கள் வருகையை போலீஸாரும், திருப்பதி தேவஸ்தானமும் எதிர்பார்க்கவில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு இல்லாததால் கூட்டநெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING --திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share