திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!
அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமைச்சர் பொன்முடி பொறுப்பற்ற முறையிலும், கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வகையிலும் பொதுமேடையில் பேசியிருப்பது தமிழகத்துக்கே அவமானம். அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கிவிட்டால் மட்டும் போதாது, அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும். அப்படி அவரை நீக்கவில்லை என்றால் திமுக அரசும், கட்சித் தலைவரும் பொன்முடியை ஆதரிப்பதாகத்தான் அர்த்தம் வரும்.
மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகத் தொடங்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் தோல்வி பயம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இதனால் கண்மூடித்தனமாக பேசத் தொடங்கிவிட்டனர்.
அதிமுக-பாஜக கூட்டணி என்பத்ய் இயற்கையான கூட்டணி. ஏற்கெனவே வென்ற கூட்டணி. மீண்டும் தமிழகத்தின் அவசியத் தேவைக்காக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், திமுக அரசை அகற்றும் வகையிலும் இக்கூட்டணி அமைந்துள்ளது. இதில் தமாகா முக்கியக் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் நலன் கருதி மேலும் பல கட்சிகளும் இக்கூட்டணிக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாச பேச்சு.. முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.. பொசுக்குன்னு சொன்ன பிரேமலதா!
.
வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் ஏழை, நடுத்தர முஸ்லிம்கள் பயனடைவார்கள். அந்த மசோதாவைப் படித்துப் பார்த்து, லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் ஆதரவாக வாக்கு அளித்தேன்" என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவின் தெளிவு... விஜயின் குழப்பம்... ஸ்டாலினின் பதற்றம்- பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!