×
 

மகளிர் உரிமைத் தொகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா?... பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சியான செய்தி...!

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

 கடந்த 12ம் தேதி 2025 - 26ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். இதேபோல் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

2026ம் ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டன. அதில் மகளிருக்கான உரிமைத்தொகையும் ஒன்று. தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழ்நாடு அரசு உரிமைத்தொகையை உயர்த்த முடியாவிட்டாலும், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மகளிர் புதிதாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளது சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: அப்பா.. அப்பா.. என்ற அந்த வார்த்தை..! மனம் மகிழ்ந்து மகளிர் தின வாழ்த்து சொன்ன முதலமைச்சர்..!

மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க: டெல்லி பெண்களே தயாரா இருங்க! மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியானது…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share