சர்ஜிகல் ஸ்ட்ரைக் ப்ளான்? - பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பிரதமர் திடீர் சந்திப்பு.. பீதியில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் ராணுவமும் சவால் விடுக்கக்கூடிய வகையிலே ஒரு சில கருத்துக்களை பேசி வருகின்றது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஷ்மீர் மாநிலத்தினுடைய பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளை கடையெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கின்றன. மேலும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படக்கூடிய பயங்கரவாதிகள், அவர்கள் சார்ந்த பயங்கரவாத அமைப்புகள், அவர்களுக்கு உதவக்கூடியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய விதமாக செயல்பாடுகள் வேகம் எடுத்துவருகிறது.
தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால், எல்லையில் உள்ள ராணுவம் மட்டுமின்றி கடற்படை, வான் படை என முப்படையும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் இருப்பதாகவும், அடிக்கடி சோதனையும் செய்து பார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த வேண்டுமென மக்கள் ஆவேசத்துடன் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். நேற்று பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து முப்படைகளை நிலை குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகள் என்ன செய்தனர்? நேரில் பார்த்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!
இன்று மீண்டும் ஒருமுறை பிரதமரை சந்தித்து முப்படைகளுடைய பாதுகாப்பு நிலை என்னவாக இருக்கின்றது என்பது குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தொடர்ச்சியாக உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று சொல்லக்கூடிய அந்த குறி பார்த்து குறிப்பிட்ட இடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
எல்லையில் ராணுவ வீரர்கள் முழு அளவில் தயார் நிலையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசினுடைய செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவமும் சவால் விடுக்கக்கூடிய வகையிலே ஒரு சில கருத்துக்களை பேசி வருகின்றது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..!