×
 

இனி யார்கிட்டயும் கெஞ்ச வேண்டாம்.. ரயிலில் கீழ்வரிசை படுக்கை இவங்களுக்கு மட்டும்தான்.. மத்திய அரசு உறுதி..!

முதியோர், 45 வயது அதற்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பணிப் பெண்கள் ஆகியோருக்கு ரயிலில் கீழ்வரிசை படுக்கை தானாகவே ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் கீழ்வரிசை படுக்கைக்கு யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை, முதியோர், 45 வயது அதற்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பணிப் பெண்கள் ஆகியோருக்கு முன்பதிவின்போது குறிப்பிட தவறினாலும் கூட டிக்கெட் முன்பதிவின்போதே கீழ்வரிசை படுக்கை இருந்தால், தானாகவே ஒதுக்கப்படும்.

இல்லாவிட்டால் ரயிலில் ஏறியவுடன் முதியோர், கர்ப்பணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நடுப்பகுதி படுக்கை, மேல்தள படுக்கைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள். இதனால் கீழ்வரிசை படுக்கையில் இருப்போரிடம் படுக்கையை மாற்றக்கோரி கெஞ்சி கேட்கும் சூழல் இருக்கும். அதில் சிலர் இரக்கப்பட்டு மேல் படுக்கை, நடுப்படுக்கைக்கு மாறுவர், சிலர் பிடிவாதமாக மாறமுடியாது எனத் தெரிவித்துவிடுவர். ஆனால், ரயில்வே அமைச்சகம் கொண்டுவந்துள்ள இந்த முறையால், இனிமேல் கீழ்வரிசை படுக்கைக்காக யாரிடமும் முதியோ், கர்ப்பணிகள், மாற்றுத்திறனாளிகள் கெஞ்சத் தேவையில்லை.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட்டை வைத்து வேறொரு ரயிலில் பயணம் செய்யலாம்.. இந்த விதி உங்களுக்கு தெரியுமா?

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பேசுகையில் “ ஒரு படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டியில் 6 முதல் 7 கீழ்வரிசை படுக்கைகளும், 3 அடுக்கு ஏசி பெட்டிலி் 4 முதல் 5 கீழ்வரிசை படுக்கைகளும், 2ம்வகுப்பு ஏசி பெட்டியில் 3 முதல் 4 கீழ்வரிசை படுக்கைகளும் முதியோர், 45வயது அதற்கு மேற்பட்டபெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பணிப் பெண்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்படும்.

முன்பதிவின்போது குறிப்பிட தவறினாலும் கூட டிக்கெட் முன்பதிவின்போதே கீழ்வரிசை படுக்கை இருந்தால், தானாகவே ஒதுக்கப்படும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயிலில் எத்தனை பெட்டிகள் இருக்கிறது என்பதைப் பொருத்து இந்த வசதி கிடைக்கும். முன்பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களிலும், ராஜ்தானி, சதாப்தி ரயில்களிலும் கிடைக்கும். 

சலுகை வசதிகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், படுக்கை வசதியுள்ள பெட்டியில் நான்கு பெர்த்களும், 3ம்வகுப்பு ஏசியில் 4 கீழ் படுக்கைகளும்,  முன்பதிவு செய்யப்பட்ட 2ம்வகுப்பு சிட்டிங் பெட்டியில் 2 இருக்கைகளும், ஏசியில் 4 இருக்கைகளும் ஒதுக்கப்படும்.

ரயிலில் எப்போதெல்லாம் இருக்கைகள் காலியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பணிப்பெண்கள் ஆகியோருக்கும் கீழ்வரிசை தர முன்னுரிமை தரப்படும். இவர்களுக்கு நடுப்பகுதி படுக்கை, மேல் தள படுக்கை ஒதுக்கப்பட்டது இனிமேல் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: பெண் ரயில் பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. ஒவ்வொரு ரயிலிலும் இனி இதுதான்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share