×
 

வீடியோ காலில் 'முத்தலாக்" சொல்லி விவாகரத்து; மனைவி புகாரை தொடர்ந்து, லண்டன் கணவர் மீது வழக்குப்பதிவு

வீடியோ கால் மூலம் மூன்று முறை முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

வீடியோ கால் மூலம் மூன்று முறை முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதன் பேரில், லண்டனில் வசித்து வரும் கணவர் மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகில் உள்ள ஸீ உட்ஸ் பகுதியில் வசித்து வரும் அந்தப் பெண்ணுக்கும் ஆஹிப் பட்டிவாலா என்பவருக்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு முஸ்லிம் மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் லண்டனில் வசித்து வந்தனர்.

ஆரம்பத்தில் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது. இடையில் வரதட்சணை தொடர்பாக இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், நவி மும்பை போலீஸ் நிலையத்திற்கு சென்ற அந்த பெண் தனது கணவருக்கு எதிராக புகார் கொடுத்தார். 

இதையும் படிங்க: சத்தீஸ்கர் என்கவுண்டர்: 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலி

அதில், "லண்டனில் இருந்த போது எங்களுக்கு இடையே  தகராறு ஏற்பட்டது. அவரும் அவருடைய குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தினார்கள். என்னுடைய நகைகள் அனைத்தையும் பறித்துக் கொண்ட கணவர், என்னை அங்கிருந்து மும்பைக்கு அனுப்பி வைத்து விட்டார்.

 அதைத் தொடர்ந்து வீடியோ கால் மூலம் மனைவியுடன் தொடர்பு கொண்ட அவர் மூன்று முறை முத்தலாக் சொல்லி என்னை விவாகரத்து செய்து விட்டார். என் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி" அவர் வலியுறுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆஹிப்பை நவி மும்பை போலீசார் தேடி வருகிறார்கள்

இதையும் படிங்க: பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை: டெல்லி பாஜக வேட்பாளரின் 'கவர்ச்சி' வாக்குறுதியால் சர்ச்சை ; காங்கிரஸ் பதிலடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share