×
 

1000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து.. அதிபர் ட்ரம்ப் முடிவு..!

1000 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் 1000 பேரின் விசாவை ரத்து செய்து அவர்களை, சொந்த நாட்டுக்கு அனுப்பும் முடிவில் அதிபர் ட்ரம்ப் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் உள்ள 160 கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், ஹார்வார்ட், மிச்சிகன், ஒஹியோ போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து 1024 மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: பித்தம் தலைக்கு ஏறிய டிரம்ப்..! 245% வரி விதித்து சீனாவுக்கு அதிர்ச்சி..!

இந்த ரத்துச் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமெரிக்க அரசின் தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தலுக்கு ஆளாக உள்ளனர். சிலர் தங்கள் படிப்பைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதில் ஏராளமான மாணவர்கள் அமெரிக்க உள்துறை அமைச்சகம்  எடுத்துள்ள நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவில் வசிப்பதற்கான அனுமதியை திடீரென பறிக்கிறது, தங்கள் தரப்பு விளக்கத்தை, காரணத்தை தெரிவிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் விசாவை ரத்து செய்ய பல்வேறு காரணங்களை அரசு தரப்பில் கூறுகிறது. பல கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், சிலர் எதற்காக அரசால் குறிவைக்கப்படுகிறீர்கள் என்பதற்காக காரணம் தெரியாமல் இருக்கிறார்கள்.

மிச்சிகன் சட்ட நிறுவனத்தின் சார்பில் வைனே பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதி, மாணவர்களின் விசா ரத்துக்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் யூதர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனதுக்கு ஆதரவாகவும் குரல்கள் கொடுப்பது, போராட்டத்தில் ஈடுபடுவது, நிதி திரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்டறிந்து, அவர்களின் விசாவை ரத்து செய்து, நாடு கடத்தும் பணியில் உள்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து தெளிவான காரணத்தை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு எப்-1 விசா வழங்கப்படும். அமெரிக்க கல்லூரி, பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் அதை வைத்து விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எப்-1 விசாவில் படிக்க வரும் மாணவர்கள் தங்களின் நிதிநிலைமை, குடும்பத்தினர் சம்பாத்தியம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். 

அமெரிக்காவில் படித்து முடிக்கும்வரை அவர்களால் செலவுகளை தாங்கிக்கொள்ள முடியுமா என்று நிருபிக்க வேண்டும். பொதுவாக மாணவர்கள் விசாவில் வருவோர் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் கிடைக்கும் சிறிய வேலையைச் செய்து அதில் கிடைக்கும் பணத்தை அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் vs ஹார்வார்ட் பல்கலை. மோதல் முற்றுகிறது.. வரிச்சலுகை ரத்தாகும் என மிரட்டல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share