×
 

அடங்கிப்போறவன்னு நினைச்சிட்டியா..? 50% கூடுதல் வரி... சீனாவை மிரட்டும் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஏப்ரல் 2 முதல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதனால், உலகம் முழுவதும் பெரும் பொருளாதார கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 60 நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் சீனா மீது 34 சதவீத வரியை டிரம்ப் விதித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சீனாவும், பதிலடியாக அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத வரியை விதித்தது.

இப்போது அதற்கும் பலத்த அடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமெரிக்காவின் ஸ்கை நியூஸில் வெளியான தகவலின்படி, ''சீனா தனது 34 சதவீத வரியை திரும்பப் பெறவில்லை என்றால், கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும்'' என்று டிரம்ப் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதல்… நிலைகுலைந்த உக்ரைன்... கண்டுகொள்ளாத டிரம்ப்..!

சீனா, அமெரிக்கா மீது விதித்துள்ள 34 சதவீத வரியை நாளைக்குள் நீக்கவில்லை என்றால், சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டோ லாம், ஏப்ரல் 5, 2025 அன்று அமெரிக்காவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தங்கள் நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளில் சலுகைகளை அமெரிக்காவிடம் கேட்டார். ஏப்ரல் 9 ஆம் தேதிக்குப் பிறகு 45 நாட்களுக்கு அமெரிக்கா தங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று லாம் கோரினார். அதற்கு ஈடாக, அவர்கள் தங்கள் நாட்டில் அமெரிக்க தயாரிப்புகளை வரிகள் இல்லாமல் விற்க முன்வந்தனர்.

இன்று, டிரம்ப் கட்டணக் கொள்கையை 90 நாட்களுக்கு வைத்திருப்பது குறித்து பரிசீலித்து வருவதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. சீனாவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் 90 நாள் வரிகளை நிறுத்துவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும்  கூறப்பட்டது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வதந்தியில் டிரம்பின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகரை மேற்கோள் காட்டி பரப்பப்பட்டது.

இப்போது இது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது. அதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 90 நாள் வரி விலக்கு பற்றிய எந்தவொரு தகவலும் போலியானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வரி விதிப்பு... டிரம்பை புலம்பவிட்ட சீனா... அடிச்சான் பாரு ஆப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share