நாளை மாவட்ட தலைநகரங்களை அதிர விடப்போகும் தவெக... விஜய் எடுத்த அதிரடி முடிவு..!
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் கிட்டத்தட்ட 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, வக்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் இது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகம் தலைமையின் சார்பில நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட தலைநகரங்களல் வக்புவாரிய திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் அவர்களுடைய மாவட்ட தலைநகரங்களில் நிகழ்த்திட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வக்பு திருத்த சட்டத்தை பொறுத்தவரையில ஏற்கனவே இஸ்லாமிய அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில இன்று மத்திய அரசு அதை நிறைவேற்றி இருப்பதை கண்டித்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் பல அரசுகள் இதை வன்மையாக கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: விஜய் கட்சியின் பிரச்சார கர்த்தாவாக மாறிய கிறிஸ்தவ கல்லூரி: சர்ச்சையோடு நுழைந்த ஆதவ்..!
அதேபோல ஒவ்வொரு கட்சிகளும் தமது கருத்துக்களையும், போராட்டங்களையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் நாளைய தினம் இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை ஒருங்கிணைக்கி இருக்கிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்த போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில தலைமை மாவட்ட தலைமைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விஜய்-க்கு வந்த புதிய சிக்கல்... மீண்டும் தன் வேலையை காட்டும் எஸ்.ஏ.சி!!