எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!
எதிர்வரும் தேர்தலில் தவெக - திமுக இடையே தான் போட்டி என பொதுக்குழு மேடையில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரான விஜய் பேசியதாவது...
நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் தோழிகளே.. அரசியல்னா என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ்றது அரசியலா... ஒரே குடும்பம் வாழ்றது அரசியலா... இங்க தமிழ்நாட்டில ஒரே குடும்பம் தான் வாழுது. எனக்கு எதிரா கொள்கை விளக்க மாநாட்டில் தொடங்கி இப்போது பொதுக்குழுவரை தடைகள் பண்றாங்க.. மாமல்லபுரம் போய் கூட்டம் நடத்துறேன். பரவாயில்லை. அத்தனையும் மீறி எங்க மக்கள் சந்திப்பு தொடர்ந்து நடக்கும்.
இதையும் படிங்க: இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே..மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது, செயலிலும் -ஆட்சியிலும் காட்டணும் அவர்களே... ஒன்றிய அரசு பாசிசம் என்றால், இங்க மட்டும் நீங்க என்ன பண்றீங்க அதே பாசிசம் தானே... கட்சித் தலைவனாக என் தொண்டர்களை மக்களை சந்திக்க தடை போட நீங்க யாரு.. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறேன்.
அதேபோல நேத்து வந்தவன் எல்லாம் முதலமைச்சர் கனவு காண்றான் என்று பேசுகிறார்கள். வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு நெருக்கடி இல்லாத போது எதற்காக எங்க கட்சிக்கு மட்டும் இவ்வளவு நெருக்கடி தருகிறீர்கள்.. அணை போட்டு ஆத்த தடுக்கலாம், காத்த தடுக்க முடியாது.. அது சூறவாளிய மாறும், ஏன் சக்திமிக்க புயலாக் கூட மாறும்.
இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண.. சமத்துவத்திற்கான மண்.. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய செய்திகளைப் பார்த்து மனஉளைச்சல் ஏற்படுகிறது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சரியில்லை. இதற்கு கரெப்ஷ்ன் கபடதாரிகள் தான் காரணம். உண்மையான மக்களாட்சி மலரணும் அதுக்கு இவங்கள மாத்தணும்.
தவெக நிர்வாகிகளே, தொண்டர்களே.. நாள்தோறும் மக்களைப் பாருங்க, பேசுங்க, அவங்க பிரச்னை என்ன என்று தெரிஞ்சுக்கோங்க. தெருத்தெருவா போங்க, வீடுவீடா போங்க. அவங்க மனசுல ஆழமான நம்பிக்கையை விதைக்கணும். அப்புறம் தலைநிமிர்ந்து பாருங்க, வீட்டு உச்சில நம்ம கட்சியோட இரட்டைபோர்யானை வாகைமலர்க்கொடி பறக்கும்..
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே..உங்கடள் ஆட்சியைப் பற்றிக் கேள்வி கேட்டா ஏன் கோவம் வருது. பெண் பாதுகாப்பு எங்க இருக்கு... சட்டம் ஒழுங்கு சரியா இருந்தா பாதுகாப்பு இருக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள அப்பானு கூப்டுறாங்கனு சொல்றீங்க.. இந்த கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களால தான் இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகுது. உங்க அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகுது..
பரந்தூர், ஜாக்டோ-ஜியோ, போதைப்பொருள் எதிர்ப்பு, போக்குவரத்துத் தொழிலாளர், மீனவர் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கை, சாம்சங் தொழிலாளர்கள், டங்கஸ்டன் சுரங்கம், விவசாயிகள், மின்கட்டண எதிர்ப்பு, இஸ்லாமிய அமைப்பினர், செவிலியர்கள், மருத்துவர்கள் என்று இந்த ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள். இன்னும் கூட சொல்ல முடியும். உங்கள் எல்லா போராட்டங்களிலும் தவெக உடன் நிற்கும்.
இங்க அங்க, அங்க அவங்க அப்படி. திமுகவோட சீக்ரெட் ஓனர்.. மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே உங்க பேரை சொல்றதுக்கு பயம் மாதிரி சொல்றாங்க. சென்டர்ல ஆள்றவங்கனு சொல்றோம். சென்டர்ல காங்கிரசா ஆளுது. ஸ்டேட்ல ஆள்றவங்கனு சொல்றோம். இங்க அதிமுகவா ஆளுது. பெயரைச் சொல்லணும் என்று கேட்டீங்கல, இந்தா வச்சிக்கோங்க..
ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளை அடிக்க மறைமுக பாஜகவுடன் அரசியல் கூட்டணி உங்க பேரை சொல்லி கரெப்ஷன் கபடதாரிகள் தமிழ்நாட்டை சூறையாட்றாங்க. ஏன் ஜி, தமிழ்நாடு என்றால் அலர்ஜி...ஜிஎஸ்டி வாங்குறீங்க, ஆனால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தரமாட்றீங்க. மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நீங்க அறிவிச்சப்பவே உங்க ப்ளான் என்னன்னு புரிஞ்சுடுச்சு. தமிழ்நாட்டுக் கிட்ட கொஞ்சம் கேர்புல்லா ஹாண்டில் பண்ணுங்க. பலபேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட்னு மறந்துடாதீங்க.
உண்மையான மக்களாட்சி என்னன்னு தவெக தரும். அதிகாரபகிர்வுடன் கூடிய ஆட்சி. பெண்கள் பாதுகாப்பை 100 சதவிதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை ஸ்ட்ரிக்டா வச்சி இருப்போம், கல்வி-மருத்துவம் எளிதில் கிடைக்கும். அதுவும் சமநீதியா தருவோம். அரசு ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துணையா நிற்போம். தவெக எப்போதும் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம் தான். நம்ம நடு விவசாய பூமி, இயற்கைவளம் கொண்ட நாடு. இங்க இயற்கை வளத்துக்கு எதிரா எந்த திட்டத்தையும் கொண்டு வர்றத ஏற்க முடியாது. அப்படி பாதிக்கப்படும்படியா கொண்டு வர்ற திட்டங்களை எதிர்ப்போம். இது எங்கள் உரிமை, கடமை, கொள்கை.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் ஆளுமைகளை, கொள்கைத் தலைவர்களாக வைத்துள்ள ஒரே கட்சி தவெக. எதிர்வரும் தேர்தலில் மக்கள் சக்தியின் உதவியுடன் நல்லரசு அமைப்பது உறுதி. பகல் கனவு காண்பதாக சொல்வார்கள். காற்று,மழை ,வெய்யிலை யாரால் தடுக்க முடியும்.. கடவுளால் உருவாக்கப்பட்டடவை. யாராலும் என்னைத் தடுக்க முடியாது. அரசியல் சுனாமியை தடுப்பார் எவர்? தடுக்க நினைக்கும் கனவு மெய்ப்படாது..
எதிர்வரும் 2026 வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி. ஒன்று TVK மற்றொன்று DMK. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
இதையும் படிங்க: மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்த விஜய்..!