2ம் ஆண்டு விழாவிற்கு தயாராகும் தவெக... பங்கேற்பாளர்கள் முதல் ஏற்பாடுகள் வரை முழு விவரம் இதோ...!
கட்சி ஓராண்டை நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து அதனை விழாவாக கொண்டாட தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவிற்காக மாமல்லபுரம் அருகே தனியார் மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவுக்கான சிறப்பு அழைப்பாளராக பிரசாந்த் கிஷோர் பங்கேற்க இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரிலான கட்சியை தொடங்கினார். கட்சி ஓராண்டை நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து அதனை விழாவாக கொண்டாட தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இதற்காக வரும் 26 ஆம் தேதி மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில் பாஸ் இருக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விழாவுக்காக வளைவுகள், பிரம்மாண்ட போஸ்டர்களுடன் பூஞ்சேரி தயாராகி வருகிறது. இந்த விழாவில் ஜன்சுராஜ் கட்சியின் நிறுவன தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பங்கேற்க இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சென்னை வரும் பிரஷாந்த் கிஷோர்.. இந்த முறை விஜய்யுடன் ஒரே மேடையில் கைகோர்ப்பு.!
சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியிருந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கான வாய்ப்புகள் வாக்கு விழுக்காடு வாய்ப்புகள் குறித்தும் அறிக்கை அளித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் 3000 பேர் சாப்பிட விடுதியில் ஏற்படு செய்யப்பட்டுள்ளதாம், ஒரு பிளேட் சைவ சாப்பாட்டின் விலையே 3000 ரூபாய் எனக்கூறப்படுகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் உரையாற்று என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் இணைய போராடும் காளியம்மாள்... தடைபோடும் நபர்.... என்னதான் நடக்கிறது?