விஷ ஊசிப்போட்டு காதலியை தீர்த்துக்கட்டிய காதலன்...போலீஸில் சிக்கிய 2 பெண்கள்!!
சேலம் அருகே விஷ ஊசிப்போட்டு காதலியை கொலை செய்த சம்பவத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அருகே விஷ ஊசிப்போட்டு காதலியை கொலை செய்த சம்பவத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பள்ளத்தில் எட்டிப்பார்த்த போது இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, அருகே கிடந்த தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.
அந்த பகுதியில் பெண்ணின் ஹேண்ட் பேக் இருந்தது. அதில் இருந்த ஐடி கார்டு, மகளிர் விடுதிக்கான பணம் கட்டிய ரசீதை பார்த்த போலீசார் இறந்த பெண்ணை அடையாளம் கண்டனர். இறந்தவர், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த லோகநாயகி என்பது, சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. லோகநாயகியின் செல்போன் எண்ணை சோதனை செய்ததில், அவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்ஹபீஸ் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
உடனே பெரம்பலூர் வந்த தனிப்படை போலீசார் அப்துல்ஹபீசிடம் விசாரணை நடத்தினர். அதில், லோகநாயகியை அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது மற்றொரு காதலி, அவரது தோழி என மூன்று பேரும் சேர்ந்து விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அப்துல்ஹபீஸ்க்கும், லோகநாயகிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கேம்ப்ளிங்கில் 50 லட்சம் லாஸ்... அதுக்காக குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்க.. நெஞ்சை உலுக்கிய நாமக்கல் சம்பவம்..!
லோகநாயகியை முஸ்லீம் பெண்க போல் இருக்க வேண்டும் என அப்துல் ஹபீஸ் மாற்றியுள்ளார். பர்தா அணிந்து கொள்வது, தலையில் துணிபோட்டு வருவது என முஸ்லிம் இதேநேரம் அப்துல் ஹபீஸ்க்கு தாவியா, சுல்தானா உட்பட வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது லோகநாயகிக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லோகநாயகியை சமாதானம் செய்ய ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே அழைத்த அப்துல் ஹபீஸ் தான் மறைத்து வைத்திருந்த விஷ ஊசியை அவருக்கு போட்டுள்ளார்.
அதில் மயங்கிய லோகநாயகியை மலையில் இருந்து 20 அடி பள்ளத்திற்குள் தள்ளி விட்டுள்ளார். காதலி இறந்து விட்டதை உறுதி செய்த அப்துல்ஹபீஸ் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் போலீசிடம் சிக்கி இருக்கிறார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தாவியா சுல்தானாவும், அப்துல்ஹபீஸ்சும் காதலித்துள்ளனர். துறையூரை சேர்ந்த மோனிஷாவும் அப்துல் ஹபீஸ்க்கு துணையாக ஏற்காட்டுக்கு வந்துளனர். மூவரும் சேர்ந்து லோகநாயகியை கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: தந்தையை இரும்பு ராடால் அடித்த மகன்... துடிதுடித்து இறந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்!!