×
 

எமனாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்.. சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்கள்!

கோவையில் மது போதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் லோகேஷ் அவரது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கோவை சரவணம்பட்டியில் வசித்து வந்துள்ளார். முன்னதாக ரவி பந்தல் அமைக்கும் பணியை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக லோகேஷ் அவரது சகோதரரிடம் இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அதற்கு அவரது சகோதரர் இரு சக்கர வாகனம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லோகேஷின் சகோதரர் தூங்கச் சென்ற பின்னர் யாருக்கும் தெரியாமல் லோகேஷ் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது லோகேஷ்-ம் அவரது நண்பருமான பிரசன்னாவும் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..

 விளாங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக சென்ற கார் ஒன்று லோகேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட லோகேஷ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் விபத்து நடந்த நிலையில், அப்பகுதியில் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்து போக்குவரத்து போல சார் மருத்துவமனைக்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி உணர்குற ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாகவும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸ் ஆர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். முன்னதாக உயிரிழந்த இரு சிறுவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவில் கிணறு தூர் போறபட்ட விவகாரம்.. அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை உதவி கமிஷனர்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share