×
 

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் செத்துப்போவார்... அதிர்ச்சி கிளப்பும் ஜெலென்ஸ்கி..!

''புடின் ஒரு சில நாட்களில் இறந்து போகலாம். பல நோய்களால் சூழப்பட்டிருக்கலாம்'' என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும், புடினின் உடல் நிலை குறித்து அதிர்ச்சி கிளப்பி உள்ளார். ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், "விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார்.  புடினின் மரணம் விரைவில் நிகழும் என்பது உண்மை " என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடித்துக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கருங்கடல் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தைக்காக ஜெலென்ஸ்கி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார். புடின் ஆட்சியில் இருக்கும் வரை, ரஷ்யாவின் ஏமாற்று வேலைகளுக்கு எதிரான உங்களது உறுதியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என ஜெலென்ஸ்கி, அமெரிக்காவை வலியுறுத்தினார். அப்போது  அவர் புடினின் உடல்நிலை குறித்த இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஒரு ஊடக நிகழ்ச்சியில் புடின் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: 1 மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய புடின்... டிரம்பை விரக்தியாக்க ரஷ்ய அதிபரின் ராஜதந்திரம்..?

 

ரஷ்யாவில் கடந்த 25 ஆண்டுகளாக விளாடிமிர் புடின் ஆட்சியில் உள்ளார். புதினுக்கு 72 வயதுக்கு மேல் ஆகிறது. அவர் பல நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் புதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதிக்கான அறிகுறி தென்பட்டு வருகிறது.சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கருங்கடலில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அது விரைவில் நிரந்தரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரந்தர போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து உக்ரைனை ஆதரிப்பதற்கான உத்திகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று மக்ரோன் எச்சரித்த போதிலும், விருப்பமுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த அமைதிப் படையினரை அனுப்புவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர் கூடுதல் இராணுவ உதவியையும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார்.


 

இதையும் படிங்க: உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம்?: டிரம்பும், புதினும் என்ன பேசினார்கள்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share