×
 

8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 7-வது ஊதியக்குழு காலம் முடிகிறது...

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை மறுசீரமைக்க 8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வரும் 2026ம் ஆண்டோடு முடிவதையடுத்து, 8-வது ஊதியக்குழு அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாறும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம்,படிகள் ஆகியவற்றை மாற்றி அமைக்க ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை மறுசீரமைக்க 8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த குழுவுக்கு ஒரு தலைவரும், இரு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். 1947ம் ஆண்டிலிருந்து ஊதியக்குழு அமைக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது, அதன் காலம் 2026ம் ஆண்டோடு முடிகிறது. இப்போது குழுவை அமைத்தால் அந்தக் குழு பரிந்துரைகள், ஆலோசனைகள், மறுஆய்வு செய்ய  போதுமான காலஅவகாசம் இருக்கும். ”எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘ஜாலி’தான்! உற்சாக அறிவிப்பு வெளியிட்ட மோடி அரசு...


10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்கும் ஊதியக் குழு அமைக்கப்படும். 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் காலம் 2026ம் ஆண்டோடு முடிகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்கள், சிவில் சர்வீஸ் பணியில் இருக்கும்  அதிகாரிகள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், தன்னாட்சி நிறுவனங்களி்ல் பணியாற்றுவோருக்கு இந்த ஊதியக்குழுவின் பரிந்துரை செல்லாது.


7-வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.7ஆயிரத்திலிருந்து ரூ.18ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஓய்வூதியம்,  ரூ.3.500 முதல் ரூ.9ஆயிரமாக உயர்ந்தது. அதிகபட்ச ஊதியமாக ரூ.2.50 லட்சமும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1.25லட்சமாக அதிகரிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சூழல், பணியாள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை வழங்கும்.

இதையும் படிங்க: 'ஆல் பாஸ்’ முறை ரத்து.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share