×
 

தீராத வயிற்றுவலி! எக்ஸ்ரே-வால் வெளியான திடுக்கிடும் தகவல்...

உத்திரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோல் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு லக்னோவில் சந்தியா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு பல வருடங்களாக சந்தியாவிற்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. 

இதையும் படிங்க: நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!

இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எந்த சிகிச்சை முறையும் கை கொடுக்காததால் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து லக்னம் மருத்துவ கல்லூரியில் சந்திக்க எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அந்த எக்ஸ்ட்ரேவால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சந்தியாவின் எக்ஸ்ரேவில் அவரது வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது.

 2008 ஆம் ஆண்டு சந்தியா குழந்தை பெற்ற போது மருத்துவரின் கவனக்குறைவால் கத்தரிக்கோல் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்சுவால் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். 17 ஆண்டுகளாக தனது மனைவி அவதிக்குள்ளாகி இருந்ததற்கு மருத்துவரின் அலட்சியம் தான் காரணம் என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சில கவனக்குறைவால் நோயாளிகள் அவதி அடைவார்கள் என்பதை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் குஷியோ குஷி... 2 பாட்டில் வாங்கினால் 1 இலவசம்..! பழைய ஸ்டாக்கை காலி செய்ய விற்பனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share