×
 

கைதிகளையும் புனித நீராட வைக்கும் உ.பி. அரசு! கும்பமேளா நீரை 68 சிறைகளுக்கு அனுப்ப முடிவு

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கங்கை,யமுனை நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தின் புனித நீரை 70 சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வழங்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 68 மாவட்ட சிறைகளில் உள்ள கைதிகளும் புனித நீராட வேண்டும் என்பதற்காக இந்த நீரை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரயாக்ராஜ் நகரில் பாயும் நதி நீர் மனிதர்கள் குளிக்க தகுதியற்றது. அதில் மனிதக் கழிவுகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் அதிக அளவு கலந்துள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளநிலையில் இந்த நீரை கைதிகளுக்கு அரசு வழங்க இருக்கிறது. மாநில சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகானின் சிந்தனையில் இந்த திட்டம் உதயமாகியுள்ளது. இந்தத் திட்டம் முதலில் உன்னாவ் மத்திய சிறையில் இருக்கும் 800 கைதிகளும் கும்பமேளா புனித நீரில் குளிப்பதற்காக கொண்டு வந்து வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து 68 மாவட்டச் சிறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 75 சிறைகளில் 89,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 62,700 கைதிகல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், 2700 கைதிகள் மீது விசாரணை நிலுவையில் இருக்கிறது.
சிறைத்துறை இயக்குநர் பி.வி.ராமசாஸ்திரி வெளியிட்ட அறிக்கையில் “ மாவட்ட சிறை நிர்வாகம் சார்பில் புனித நீரில் கைதிகள் குளிப்பதற்கான ஏற்பாடுகள், பூஜைகளை 21ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்ட சிறையும், அவர்கள் பொறுப்பில் திரிவேணி சங்கத்தில் கைதிகள் குளிப்பதற்காக புனித நீரை சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!

இது குறித்து உ.பி. சிறைதுறை நிர்வாகம் சார்பில் ஒரு அதிகாரி கூறுகையில்  “ சிறையில் கைதிகள் குளிப்பதற்காக சிறிய குளம் உருவாக்கி அதில் புனித நீரைக் கலக்க வேண்டும். வழக்கமான தண்ணீரில் திரிவேணி சங்கத்தின் புனித நீரைக் கலந்தாலே போதுமானது என சங்கராச்சார்யாக்கள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். வரும் 21ம் தேதிக்குள் உ.பியில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகளையும் புனித நீரைக் கொண்டு குளிக்க ஏற்பாடு செய்து முடிக்க வேண்டும் என்று சிறைத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அனைத்து சிறை நிர்வாகங்களும் புனித நீரைக் கொண்டுவருவதற்கும், கைதிகள் புனிதநீராடுவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கும்பமேளாவே வேஸ்ட்.! எந்தப் பயனும் இல்லை.. கடித்துக் குதறிய லாலு யாதவ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share